அரசு மருத்துவக் கல்லூரி இல்லா மாவட்டமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

96

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் முதுகலை மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 508 இடங்களை தமிழகம் பெற்று இருப்பது இந்தியாவிலேயே இல்லாத ஒன்று என்றும் அவர் கூறினார்.