மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டி : தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் வெற்றி

72

மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் நான்காம் சுற்றுக்குத் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் முன்னேறியுள்ளார்.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், போர்ச்சுகல் நாட்டின் ஜோவா சூசா ஆகியோர் விளையாடினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஏழுக்கு ஐந்து, ஏழுக்கு ஐந்து என்கிற செட் கணக்கில் கெவின் ஆண்டர்சன் வெற்றிபெற்றார். நான்காம் சுற்று ஆட்டத்தில் அவர் ஆஸ்திரேலியாவின் ஜோர்டன் தாம்சனை எதிர்கொள்கிறார்.