டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவவில்லை | முல்லர் குழு அறிக்கை தாக்கல்

73

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவவில்லை என்று முல்லர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் கண்ட ஹிலாரி தோல்வி அடையவும் ரஷியா உதவியது என்ற புகார் எழுந்தது. இதுகுறித்து ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு கடந்த 22 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையை ஜனாதிபதி டிரம்பும், குடியரசு கட்சியினரும் சூனிய வேட்டை என விமர்சித்தனர்.

இப்போது விசாரணை முடிந்து, அதன் அறிக்கை, அமெரிக்க அரசு நீதித் துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா எந்த வகையிலும் உதவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், தனது நிர்வாகத்தின் மீது துவக்கத்தில் இருந்தே தொங்கி கொண்டு இருந்த சந்தேகம் என்ற இருள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.