வாடிக்கையாளர்களிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவனம் | பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

132

ரியல் எஸ்டேட் மற்றும் ஆன்லைன் விற்பனை மூலம் பல லட்சம் மோசடி செய்த திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் என்பின் இகாம் என்ற தனியார் நிறுவனம், தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட், ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை, சுற்றுலா உட்பட பல்வேறு சேவைகளை நடத்தி வருகிறது. இதனிடையே இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள அந்த நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.