40 தொகுதிகளையும் கைப்பற்றி, ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

102

பெட்டிக்கடையில் சோடா விற்று, ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்த டிடிவி தினகரன் நல்வாழ்வு பெற வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி, ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்ப்பிப்போம் எனவும் கூறினார். முன்னதாக, அமைச்சர் வளர்மதி பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஜோம்பப்டியும், 5 சதவீதம் பேருக்கு அல்வாவும் கொடுக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.