ரயிலின் உணவகப் பெட்டியில் தீ விபத்து!

86

ஆந்திர மாநிலத்தில் ஒரு ரயிலின் உணவகப் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் அந்தப் பெட்டி முற்றிலும் கருகி நாசமானது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூருக்கு யஷ்வந்த்பூர்-டாடா நகர் அதிவிரைவு ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ரயிலின் உணவகப் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட ரெயில் ஊழியர்கள், ரெயிலை உடனடியாக நிறுத்தி, அதிலிருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டனர்.

உணவக பெட்டியில் ஏற்பட்ட தீ பிற பெட்டிகளுக்கு பரவாமல் தடுத்து அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உணவகப் பெட்டி முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீ விபத்து காரணமாக அந்த வழியாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. விபத்து குறித்து ரெயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.