கராத்தே செல்வின் நாடாரின் 22-வது நினைவு தினம்

52

வரும் மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாக, காமராஜர் ஆதித்தனார் கழகத் தலைவர் வயோலா செல்வின் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் காமராஜர் ஆதித்தனார் கழகத்தை துவக்கிய கராத்தே செல்வின் நாடாரின் 22-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, கராத்தே செல்வின் மனைவி வயோலா மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறினார்.