அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது – உச்சநீதிமன்றம்

77

டிடிவி தினகரனுக்கு பொதுசின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மக்களவை மற்றும் தமிழக இடைத்தேர்தலுக்கு பொதுசின்னமான குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு, அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டி.டி.வி.தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. டிடிவி தினகரன் தனது கட்சியை பதிவு செய்யவில்லை என்பதால் பொது சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பொதுசின்னம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை முன்மாதிரியாக கருதக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நீதிமன்றம் உத்தரவில் கையெழுத்திட்டு விட்டதால் கோரிக்கையை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.