காதலர் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் காவலர் தற்கொலை

126

திருச்சியில் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த ராஜலட்சுமி, ஆயுதப்படையின் மற்றொரு காவலரான சிவக்குமார் என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ராஜலட்சுமி தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தவே அதற்கு சிவக்குமாரும் அவரது பெற்றோரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி இரவில் சிவக்குமாருடன் நெடுநேரம் செல்போனில் பேசியுள்ளார். அவர்களிடையே தகராறு வந்ததில் கோபமடைந்த ராஜலட்சுமி செல்பேசி அழைப்பைத்துண்டித்துள்ளார்.

sucideமீண்டும் அழைப்பு விடுத்தும் ராஜலட்சுமி எடுக்காததால் சந்தேகமடைந்த சிவக்குமார் ராஜலட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மயங்கிய நிலையில் இருந்த ராஜலட்சுமியை உடனடியாக மீட்டுத் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் ராஜலட்சுமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ராஜலட்சுமி அரளி விதையை அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.