தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகள் இடையே ரகசிய உடன்பாடு | ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் சர்மிளா குற்றச்சாட்டு

86

தெலுங்குதேசக் கட்சிக்கும் ஜனசேனா கட்சிக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சர்மிளா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. நடிகர் பவன் கல்யாண் தொடங்கியுள்ள ஜனசேனா கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரசின் சர்மிளா, ஜனசேனா கட்சிக்கும் தெலுங்கு தேசக் கட்சிக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாகத் தெரிவித்தார். சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தலின்படியே பவன் கல்யாண் செயல்பட்டு வருவதாகவும் சர்மிளா குற்றஞ்சாட்டினார். அதனால்தான் தகவல் திருட்டு, விவேகானந்த ரெட்டி கொலை ஆகியவை பற்றி பவன் கல்யாண் எதுவும் கூறவில்லை என்றும் சர்மிளா தெரிவித்தார்.