ஊழல் செய்த இபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர்கள் விரைவில் சிறை செல்வார்கள் !

60

ஊழல் செய்த இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் விரைவில் சிறை செல்வார்கள் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வேட்பாளர் ஜோதிமணியை அறிமுகம் செய்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், கரூர் பகுதியில் தம்பிதுரைக்கு மட்டுமே வளர்ச்சி என்றும், மக்களுக்கு இல்லை என தெரிவித்தார். ஊழல் செய்த இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, தங்மணி உள்ளிட்ட அனைவரும் விரைவில் சிறை செல்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, கடந்த காலங்களில் மணப்பாறை பகுதியில் குறைவான வாக்குகள் பெற்றது உண்மை தான் என்றும், வருகிற தேர்தலில் வேட்பாளர் தம்பிதுரையை விட 50 ஆயிரம் வாக்குகள் பெறுவோம் என உறுதிபடத் தெரிவித்தார்.