ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 250 பட்டு புடவைகள் பறிமுதல்..!

48

சேலத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 பட்டுப்புடவைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் 24 மணி நேரமும், தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தில் சோதனை மேற்கொண்டபோது, உரிய ஆவணங்களின்றி அதில் பட்டுப்புடவைகள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சீர்காழி அடுத்த செம்மங்குடியிலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் சோதனை மேற்கொண்டபோது, அதில் உரிய ஆவணமின்றி பணம் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், பணத்தை எடுத்து சென்ற பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.