சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி..!

51

மக்களவை தேர்தலையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சொந்த மாவட்டமான சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சொந்த மாவட்டமான சேலம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்த பின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.