தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் மது மகாஜன் இன்று சென்னை வருகை..!

42

தமிழகத்திற்கான சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மது மகாஜன் இன்று தமிழகம் வரவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏப்ரல் 9-ம் தேதிக்கு பிறகு யாரும் கருத்து கணிப்பு வெளியிடக்கூடாது என்றார். மக்களவை மற்றும் சட்டசபை இடைதேர்தலுக்காக தமிழகத்தில் பொது பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளதாக சத்யபிரதா சாகு குறிப்பிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஆயிரத்து 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சி விஜில் செயலி மூலம் வந்த 314 புகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகம் முழுவதும், தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் பல கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரத சாகு குறிப்பிட்டார். தமிழகத்திற்கான சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மது மகாஜன் இன்று தமிழகம் வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.