ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட சிலிக்கான் மணல் பறிமுதல்..!

93

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட சிலிக்கான் மணல் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் , இது தொடர்பாக, 6 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் -தண்டையார் பேட்டை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்திய போலீசார் ஓட்டுனர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் லாரியில் இருந்த தார்பாயை அகற்றி சோதனை செய்தனர்.

அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சிலிக்கான் மணல் இருப்பது தெரியவந்தது. 75 டன் மணலுடன் 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் லாரியில் வந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கொடுங்கையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சப்ளை செய்ய கொண்டுவந்ததாக ஓட்டுனர்கள் தெரிவித்ததால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.