அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்..!

52

சேலம் மக்களவை தொகுதி வேட்பாளர் பெயரை மறந்து, தம்பி வழக்கறிஞரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சேலம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் அறிமுகம் நிகழ்ச்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்போது விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார். வருகிற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவும், மத்தியில் பாஜகவும் வெற்றி பெற்றததால்தான் கோதாவரி நதிநீரை, காவிரியில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் கூறினார்.