நாட்டுப்புற கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை..!

182

சேலம் மாவட்டத்தில் கச்சேரி முடித்துவிட்டு காரில் வந்த நாட்டுப்புற கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினரின் கச்சேரி நடைபெற்றது. பின்னர் அதற்கான தொகை 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு இருவரும் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். தாரமங்கலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி அதிலிருந்த 57 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனால் புஷ்பவனம் குப்புசாமி பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த கோவில் நிர்வாகிகள், தாங்கள்தான் பணம் கொடுத்தாக கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்தனர்.