உத்தர திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு..!

78

பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலையில் வருடாந்திர உற்சவம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது என்றும் அதை முன்னிட்டு கோயில் நடை இன்று திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவறை வாயிலில் தங்கத்தகடுகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட கதவுகள் பொருத்தப்பட உள்ளதாகவும், பழைய கதவில் சிறிய பிளவு ஏற்பட்டிருந்த நிலையில், தேக்கு மரத்தால் ஆன புதிய கதவு பொருத்தப்பட்டு, 4 கிலோ தங்கத்தகடுகள் வேயப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேவஸ்தானம், 10 நாள் விழாவுக்கு பின் வரும் 21ம் தேதி திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும் என்றும் கூறியுள்ளது.