சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு | சுவாமி தரிசனத்திற்கு இளம் பெண்கள் வர வாய்ப்பு

85

சபரிமலை ஐயப்பன் கோவில் இரண்டாவது நாளாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டது. வருகிற 17 ஆம் தேதி இரவு அரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். கோவில் திறந்து இருக்கும் 5 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கின்றன. இதனால் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இம்முறையும் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சபரிமலையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இதனிடையே, சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.