சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை, ஏற்பதாக தேவசம் போர்டு ஒப்புதல்..!

115

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக தேவசம் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி, 48 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, வரும் 6-ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதாக தேவசம்போர்டு கூறியுள்ளது. மேலும், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கும் தீர்ப்பை ஏற்பதாகவும் ஒப்புதல் தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.