சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பதை எதிர்த்து போராட்டம் | நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் இன்று விசாரணை

95

சபரிமலை தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் – 50 வயது பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அகில இந்திய அய்யப்ப சேவா சங்கம் நாயர் சேவா சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் நாரிமன் கன்வில்கர் சந்திரசூட் இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது.