சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 இளம் பெண்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர்

87

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 இளம் பெண்கள் மட்டுமே தரிசனம் செய்திருப்பதாக கேரள இந்து அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களும் வரலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதனிடையே சபரிமலை சன்னிதானத்திற்குள் 51 இளம் பெண்கள் சென்று தரிசனம் செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்ததுடன் அவர்களின் விவரங்களையும் தாக்கல் செய்தது. அதில் குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் 34 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன. இந்த நிலையில் இதுகுறித்து கேரள சட்டசபையில் பேசிய அம்மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், இளம் பெண்களான கனகதுர்கா, பிந்து அம்மினி ஆகியோர் மட்டுமே சபரிமலையில் தரிசனம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.