எதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு

121

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளதாக நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பதி திருமலையில், நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்காமல், பிரதமர் மோடியை ராஜினாமா செய்ய வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறுவது வெட்கக்கேடு என்று கூறினார். புஷ்கரம் திருவிழாவில் 33 பேர் உயிரிழந்தபோது, சந்திரபாபு நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்தாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார் .