திருமாவளவனுக்கு அரசியலில் அடைக்கலம் கொடுத்தது பாமக

26

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அரசியலில் அடைக்கலம் கொடுத்தது பாட்டளி மக்கள் கட்சி தான் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், அரசுக்கு எதிராக மக்களின் மனநிலை இல்லை என்றார். அதிமுக, பாமகவின் தேர்தல் அறிக்கைகள் அற்புதமாக இருப்பதாகவும், ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கை ஒன்றுக்கும் உதவாத வகையில் உள்ளதாகவும் ராமதாஸ் கூறினார். திருமாவளவனின் பேச்சுகள் சமீப காலமாக மக்களுக்கு எதிராகவும், சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தமிழ் சமுதாயத்திற்கு பயன்படுவார் என்று எண்ணியே, அவரை தலைவராக ஆக்கியதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.