மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என ராகுல் உறுதி!

61

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தனியாக மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரில் மீனவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகள் உடனடியாக அரசுக்குச் சென்றுசேர வேண்டுமென்றால் அவர்களுக்கென்று தனியாக ஒரு அமைச்சகம் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறைக்கு எனத் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

குறைந்தபட்ச வருமான உறுதித் திட்டத்தின்படி குறைந்தபட்ச வருமானத்துக்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு அதை ஈடுசெய்யும் வகையில் அரசின் நிதியுதவி வழங்கப்படும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.