வீரர்கள் கொல்லப்பட்ட நேரத்தில் கேமராவுக்கு போஸ் கொடுத்தவர் மோடி | ராகுல்காந்தி குற்றச்சாட்டு

75

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொதுமக்கள் மக்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல்காந்தி, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என மத்திய அரசு அளித்திருந்த அந்த வாக்குறுதியை மத்தியில் அமையப்போகும் காங்கிரஸ் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என உறுதி அளித்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனக் கூறிய ராகுல்காந்தி, புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள், தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார் என குற்றம் சாட்டினார்.

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. மறுத்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் டுவிட்டர் தளத்தில், ராகுல் காந்தியின் பொய் செய்திகளை கேட்டுக்கேட்டு நாடு அலுத்துவிட்டது என்றும், தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து நாட்டை தவறாக வழிநடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளது. மேலும், அடுத்தமுறை இதைவிட சிறப்பாக முயற்சி செய்யவும் என ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்துள்ள அந்த டுவிட்டர் பதிவில், வீரர்களின் தியாகத்தை இணைக்க வேண்டாம் என கூறப்பட்டு உள்ளது.