போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் எப்படி இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும் – ரகுராம் ராஜன் கேள்வி

64

போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் இந்திய பொருளாதாரம் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும் என மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி கூறியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என சந்தேகம் எழுந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிய ஒரு சீரமைப்பு நடவடிக்கை தேவை என்றும், போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் இந்திய பொருளாதாரம் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும் எனவும் மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளிவிவரத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.