விழுப்புரம் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். தீவிர தேர்தல் பிரச்சாரம்

47

தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர், அதிமுக-வின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். 2023 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை குடிசையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.