தேர்தல் அதிகாரியுடன், நெல்லை மாவட்ட ஆட்சியர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை..!

133

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. நெல்லை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உள்ள கூட்டுறவு பண்ணை பசுமை காய்கறி அங்காடி, அம்மா மருந்தகம் ஆகியவற்றில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்கள் அகற்றப்பட்டதாக அங்காடி பொறுப்பாளர் தெரிவித்தார்.