திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்!

85

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடி சாலையில் வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

நெல்லை மாவட்டத்தின் வள்ளியூரிலிருந்து ஏர்வாடி நோக்கி வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. தனியார் ஆங்கில பள்ளி அருகே வேன் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வேனின் உரிமையாளர் ஷாபேசனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.