ஒன்றாம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை..!

120

கோவை அருகே அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த பெண் குழந்தை கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பன்னிமடையை அடுத்துள்ள திப்பனூர் அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தையை பள்ளி முடிந்தவுடன் அந்தக்குழந்தையின் தாத்தா தேடியுள்ளார். பல இடங்களில் தேடியும் பெண் குழந்தை கிடைக்காத நிலையில், இன்று அதிகாலை கஸ்தூரி நாயக்கன்புதூர் என்ற இடத்தில் குழந்தையின் உடல் முழுவதும் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தை கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், சடலம் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.