அஜீத்தை தொடர்ந்து பாஜகவுக்கு மோகன்லால் தந்த அதிர்ச்சி

134

பாஜக சார்பாக மலையாள நடிகர் மோகன்லால் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியான நிலையில், தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் தெரிவித்திருப்பது பாஜகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக மலையாள நடிகர் மோகன்லால் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் பரவியது. இந்நிலையில் கேரளாவில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் எந்த தொகுதியை வேண்டுமானாலும் மோகன்லாலுக்கு விட்டுக்கொடுக்க தயார் என்று அந்தக் கட்சியின் தலைமை கூறியது.இதற்குப் பதிலளித்த மோகன்லால், அரசியல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பதால் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று தெரிவித்தார். அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். இதுபோல் சமீபத்தில் நடிகர் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று அஜீத் திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.