5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்

45

விண்வெளித்துறையில் உலகின் தலைசிறந்த நான்காவது நாடாக இந்தியா திகழ்கிறது என பிரதமர் மோடி பெருமைபட கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், விண்வெளித்துறையில் பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளித்துறையில் இந்தியா பெரிய நாடாக வளர்ந்துள்ளதை சுட்டிக் காட்டி பேசிய பிரதமர் மோடி, மிஷன் சக்தியை வெற்றி பெற செய்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், விண்வெளித்துறையில் உலகின் தலைசிறந்த நான்காவது நாடாக இந்தியா திகழ்கிறது எனவும் பிரதமர் மோடி பெருமைபட கூறினார்.