சபரிமலை -ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது !

86

கேரள கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரம் ஒன்றே உதாரணம் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக இளைஞரணியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார் அப்போது சபரிமலை விவகாரம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது என்றும் கேரள மாநிலத்தின் கலாச்சா ரத்தை அழிக்க இடதுசாரி அரசு எப்படியெல்லாம் முயற்சி செய்தது என்பதை இந்திய மக்கள் அறிவார்கள் என்றும் தெரிவித்தார். இடதுசாரி அரசு மாநிலத்தின் கலாச்சாரத்தை சிதைப்பது ஏன்? என்று வினா எழுப்பிய பிரதமர் மோடி, துரதிஷ்டவசமாக கேரளாவின் பண்பாடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஆதங்கம் தெரிவித்தார். அனைத்து சம்பவங்களும் மாநிலத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் அரசால் ஏற்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். காங்கிரசும், இடதுசாரிகளும் ஜனநாயகம் பற்றி பேசுவது மிகவும் வேடிக்கையானது என விமர்சித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் தம்மை எப்படி வேண்டுமென்றாலும் தாக்கி பேசலாம் என்றும் ஆனால் அவர்களால் விவசாயிகளை தவறாக வழிநடத்த முடியாது என்றும் கூறினார். இளைஞர்களுக்கான வாய்ப்புகளில் எதிர்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.