தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களும் உறுதியாக கொண்டு வருவோம் – பிரேமலதா விஜயகாந்த்

63

தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதிக போட்டியிடும் 4 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என்றார். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக இந்த முறையும் நிச்சயம் வர இருப்பதாகவும், இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து நல்ல விஷயங்களும் உறுதியாக கொண்டு வருவோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் தேமுதிக பங்கேற்று உள்ளதாகவும், பிரச்சினை என்றால் முதல் ஆளாக தாங்கள் நிற்போம் என அவர் திட்டவட்டமாக கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார். தே.மு.தி.க. சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை தே.மு.தி.க. பின்பற்றும் எனவும் அவர் கூறினார்.