ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 210 மடிக்கணினிகள் பறிமுதல்..!

28

சென்னையில் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 210 மடிக்கணினிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி அருகே உள்ள ஆதம் மார்க்கெட் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்ற ஆம்னி வேனை சோதனை செய்ததில், ஆவணங்களின்றி 210 மடிக்கணினிகள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்கள் அனைத்தும் ஹெச்.பி. மற்றும் டெல் நிறுவனத்துக்கு சொந்தமானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.