மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் வளர்ச்சி 2 மடங்காக உயரும்..!

45

மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழகத்தில் வளர்ச்சி இரண்டு மடங்காக உயரும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

கோவை சுங்கம் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஏழைகளுக்கு பணம் வழங்குவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளது, மக்களை முட்டாளுக்கும் முயற்சி என குற்றச்சாட்டினார். மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் எடப்பாடி அரசு கொண்டுவந்துள்ளதை மக்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்ததால் தான், அனைத்து தரப்பு மக்களின் நிலைமையையும் பிரதமர் மோடி உணர முடிவதாகவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.