கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆட்சியருடன் சந்திப்பு..!

59

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கில் தாமதமின்றி சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்யப்படுவர் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் தங்களது குழந்தைக்கு நடைபெற்ற கொடூரம் எதிர்காலத்தில் எந்த குழந்தைக்கும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த ஆட்சியர் ராசாமணி, சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாமதமின்றி சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்ய காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.