6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை | பிரேத பரிசோதனையில் உறுதி

58

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானது.

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தது. கூலித் தொழிலாளியின் மகளான சிறுமி திடீரென மாயமானார். இந்நிலையில் நேற்று காலை சிறுமி அவரது வீட்டருகே மர்மமான முறையில் கை, கால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

தகவலறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொலையாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கடந்த 2 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமி கொலை வழக்கு குறித்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரில் விஜயகுமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.