ஆந்திராவில் ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து!

70

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ரெயிலில் திடீர் என ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எஸ்வந்த்பூர் – டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுள்ளது அப்போது , அதிகாலை 2 மணி அளவில் ரயிலின் கேண்டீன் பெட்டியில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தீ மேலும் பரவாமல் தடுக்க விபத்து ஏற்பட்ட பெட்டியை ரயில் ஊழியர்கள் தனியாக கழற்றி விட்டனர். பின்னர் தீயை அணைக்க ஊழியர்கள் முயற்சி செய்தனர். எனினும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இந்த தீ விபத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப் படவில்லை. தீ விபத்தில், ரயிலின் கேண்டீன் பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக விஜயவாடா- விசாகப்பட்டினம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகின. சம்பவ இடத்தில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.