ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா..!

80

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் கண்ணகியின் வாழ்நாள் கதைகளைப் பாடி, பொங்கல் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பெண்களின் சபரி மலை என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் ஆண்டு தோறும் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விழா கோலாகலமாகத் தொடங்கியது. செண்டை மேளம் முழங்க அம்மனை பச்சைப் பந்தலில் அமரவைத்து, கண்ணகியின் வாழ்நாள் கதைகளை பாடலாக பாடும் தோற்றம் பாட்டு பாடி திருவிழா உற்சாகமாகத் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.