கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம் | பேருந்துகள் தமிழக எல்லை வரை இயக்கம்

179

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழக பேருந்துகள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த கிருபேஷ், சரத்லால் ஆகிய இரண்டு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பலால் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் கேரளா செல்லும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல், முழுஅடைப்பு போராட்டம் காரணமாக பொள்ளாச்சி வழியாக கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.