கேரள மாநிலத்தில் 14 மக்களவை தொகுதிகளில் பாஜக போட்டி..!

87

20 மக்களவை தொகுதிகளைக் கொண்ட கேரளா மாநிலத்தில் 14 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

கேரளாவில், பாரத தர்ம ஜன சேனை, பி.சி. தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதில் 14 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. பாரதிய தர்ம ஜன சேனை கட்சிக்கு 5 தொகுதிகளும், கேரள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் அறிவித்துள்ளார். இதனையடுத்து, எந்த கட்சி, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ககப்படுகிறது.

திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரை எதிர்த்து கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கேரளா மாநிலத்தில், ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.