மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை | போலீசார் தீவிர கண்காணிப்பு

81

கேரள மாநிலம் வயநாடு அருகே நடந்த துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வயநாடை அடுத்திருக்கும் வைத்திரி பகுதியில் உள்ள ரிசார்ட்டில் இன்று அதிகாலை திடீரென புகுந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து ரிசார்ட் சென்ற கேரள அதிரடிப்படை மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச்சண்டை நடத்தியது. இந்தச் சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனக்கூறப்படுகிறது. மற்றொரு மாவோயிஸ்ட் காயத்துடன் தப்பியோடினார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவார் என்பதால் கேரளம்- தமிழகம் ஒட்டியிருக்கும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.