காஷ்மீரில் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் தாக்குதல் | பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

35

காஷ்மீரில் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், கடந்த மாதம் பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை, 1000 கிலோ குண்டுகளை வீசி பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் கைவரிசை காட்ட அவர்கள் முயற்சிகளில் ஈடுபட உள்ளதாக உளவு துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மொத்தம் 6 நாடாளுமன்ற தொகுதிகளில் 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.