அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது..!

13

கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் அடுத்த தான்தோன்றிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பொருளாதாரத் துறை தலைவராக உள்ள இளங்கோ என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.

இந்தநிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் மீது குற்றம் சாட்டிய மாணவ, மாணவிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தனர். இந்நிலையில், மாணவ, மாணவிகளின் போராட்டத்தின் எதிரொலியால், பேராசிரியர் இளங்கோ அதிரடியாக கைது செய்யப்பட்டார்.