திருச்சி அருகே அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு

106

திருச்சி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியினை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்பாளையத்தான்பட்டியில் அந்தோணியார் ஆலயத் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, திண்டுக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை 300க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டு அடக்கினர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.