6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி !

73

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற 5-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணி, பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாடியது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணியை சேர்ந்த பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர். இதனால் 19 புள்ளி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 150 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. இதில், அதிகபட்சமாக வாட்சன் 44 ரன்களும், ஆட்டமிழக்காமல் தோனி 32 ரன்களும் எடுத்தனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.