தேர்தல் கூட்டணி குறித்து 3,4 நாட்களில் அறிவிக்கப்படும் – ஜி.கே.வாசன்

89

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் 3,4 நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி விரைவில் ஏற்படுத்தப்படும் என்று கூறினார். கரூர் மாவட்டத்தில் வாழை விவசாயத்தை பாதுகாக்க, காவிரி கிளை வாய்க்கால்களில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொண்ட ஜி.கே.வாசன், இலங்கைச் சிறையில் வாடும் 42 மீனவர்களையும், 24 படகுகளையும் மீட்க இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.