ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு | விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

110

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ரயில்வே துறை சுரங்கப்பாதை அமைப்பதைக் கண்டித்து விவசாயிகள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

லால்குடி அருகே மேலவாளாடி, புதுக்குடி கிராமங்களுக்கு இடையே ரயில்வே நிர்வாகம், சுரங்கப் பாதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சுரங்கப்பாதை அமைத்தால் இரண்டாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களை கொண்டு செல்லமுடியாது என்பது அவர்களது குற்றச்சாட்டாகும். அதனால் அந்தப்பணியை நிறுத்தவேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்குவந்த ரயில்வே அதிகாரிகள் விவசாயிகளுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.